என்எச்எஸ் மலக் குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை: மலம் சோதனைக்கான கருவிகள் குறித்த அறிவுறுத்தல்கள் (Tamil)
புதுப்பிக்கப்பட்டது 2 அக்டோபர் 2024
Applies to England
உங்கள் சோதனை கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய அறிவுறுத்தல்கள்.
ஆங்கிலத்தில், பிரித்தானிய சைகை- மொழியில், ஏனைய மொழிகளில் மொழிபெயர்ப்பு வடிவங்களில் கிடைக்கின்றது.

போத்தலில் தேதியை எழுதுதல்
பைறொ பேனாவினால் மாதிரி உள்ள போத்தலில் தேதியை எழுதவும்.
உங்கள் மலத்தை எடுப்பதற்காக ஒரு கொள்கலத்தை அல்லது கழிவறை கடுதாசி அடுக்குகளைப் பயன்படுத்தவும்.
கழிவறை தண்ணீரில் உங்கள் மலம் படாமல் இருக்கப் பார்த்துக்கொள்ளவும்.

மாதிரியைச் சேகரித்தல்
மாதிரி போத்தலைத் திறப்பதற்கு, மூடியைத் திருகவும்.
வரிப்பள்ளங்கள் அனைத்தும் நிரம்பும் வரை மலம் ஊடாகக் குச்சியை உரசுவதன் மூலமாக, ஒரு மாதிரியைச் சேகரிக்கவும்.
சோதிப்பதற்காகச் சிறிதளவு மலமே எங்களுக்குத் தேவைப்படுகின்றது. தயவுசெய்து மேலதிகமாகச் சேர்க்கவேண்டாம்.

மூடியை அழுத்தி மாதிரி போத்தலை மூடுதல்
குச்சியைத் திரும்பவும் போத்தலுக்குள் வைத்து, அதை மூடுவதற்காக, மூடியை 바카라 사이트கிளிக்바카라 사이트 செய்யவும்.
பயன்படுத்தலுக்குப் பின்னர், போத்தலைத் திரும்பத் திறக்க வேண்டாம்..
பயன்படுத்தலுக்குப் பின்னர், தயவுசெய்து உங்கள் கைகளைக் கழுவவும்.

பூர்த்திசெய்யப்பட்ட கருவிகளை அனுப்புவதற்குத் தயார்படுத்தல்
மாதிரி போத்தலில் தேதியை எழுதியுள்ளீர்கள் எனப் பார்த்துக்கொள்ளவும்.
திருப்பி அனுப்புவதற்காக வழங்கப்பட்ட கடித உறையில் மாதிரி போத்தலை வைக்கவும்.
நாடாவை உரித்தெடுத்து, கடித உறையை மூடி, அதனை அனுப்பவும்.
தயவுசெய்து முடிந்தளவு விரைவில், உங்கள் பூர்த்திசெய்யப்பட்ட கருவிகளை அனுப்பவும்.